சிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி: பிரபல இசையமைப்பாளர் வேதனை

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

ஜிகர்தண்டா, கபாலி உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிட்னி விமான நிலையத்தில் தமக்கு நேர்ந்த நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சிட்னி விமான நிலைய அதிகாரிகளால் தாம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து எட்டாவது முறையாக தன்னை 'இரசாயன் பொருள் சோதனை'க்கு உட்படுத்தியுள்ளதாகும் கூறும் அவர்,

கடுமையான முறையில் தன்னை அதிகாரிகள் நடத்தி அவமதித்துள்ளனர் என்றார்.

மட்டுமின்றி நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் விமான நிலையங்களில் தொடர்ந்து இந்திய பிரபலங்களுக்கு இதைப் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்