சிம்பு, த்ரிஷா மற்றும் வடிவேலு மீது புகார்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர்கள் சிம்பு, த்ரிஷா மற்றும் வடிவேலு ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதால், விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நடந்த ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா, முன்னணி நடிகர், காமெடி நடிகர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புகார் வந்திருப்பதாகவும், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் சமூக வலைதளத்தில் விவாதத்திற்கு உள்ளானதை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட தகவலில், சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் நஷ்டத்தைத் தொடர்ந்து, சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்திருந்தார்.

அதேபோல, நடிகர் வடிவேலு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மனகக்சப்பினால், படப்பிடிப்புக்கு வராததால், மூன்று கோடி ரூபாய்க்கு போடப்பட்ட அரங்குகள் அப்படியே இருப்பதாக தயாரிப்பாளர் சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், ’சாமி 2’ படத்திலிருந்து த்ரிஷா விலகலைத் தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கதையையே மாற்றக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் த்ரிஷா மீது புகார் அளித்திருக்கிறார்.

இவர்கள் மூன்று பேருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும், தவறுகள் யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க தலைவர் விஷால் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகர் சங்கம் சார்பில் வரும் புகார்களுக்கு, தயாரிப்பாளர் சங்கத்தின் குழு நடவடிக்கை எடுக்க விஷால் அதிகாரம் வழங்கியிருப்பதால், இந்த பிரச்சனை குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers