இமயமலையில் ரஜினிகாந்தின் தியான நிலையம்: வெளியானது புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
158Shares
158Shares
ibctamil.com

நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் பாபாவை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு தனது நண்பருடன் இணைந்து ஸ்ரீ பாபாஜி தியான நிலையம் ஒன்றை கட்டியது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

இமயமலையில் உள்ள மகா அவதார் பாபாஜி குகைக்கு தன் நண்பர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுதோறும் பயணம் செய்து தியானம் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில், தனது நெடுநாள் கனவான பாபாஜி குகைக்கு அருகே சிறிய ஆசிரமம் கட்டும் பணியை பெங்களூருவைச் சேர்ந்த நண்பர் ஹரி மூலம் கடந்த சில மாதங்களாகவே ரஜினி செய்து வந்தார்.

அதன்படி ஆசிரமமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் திறப்பு விழாவுக்காக சமீபத்தில் ஹரி அவரை அழைத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு வேலை காரணமாக ரஜினியால் செல்ல முடியவில்லை.

இதையடுத்து இமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்தின் புகைப்படம் தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்