மீண்டும் வருவேன்: சிம்புவின் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
265Shares
265Shares
ibctamil.com

நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் அவர் பேசியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததிற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது.

எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.

சமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்! இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்