நடிகர் சிம்பு வீட்டின் முன் குவிக்கப்பட்ட பொலிசார்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாஜக-வினர் நடிகர் சிம்புவின் வீட்டை முற்றுகையிடலாம் என செய்திகள் வெளியான நிலையில் அவர் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட Demonetization-ஐ விமர்சிக்கும் வகையில் Demonetization Anthem யூ-டியூபில் வெளியாகி வைரலாகியுள்ளது. இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுத, நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு ஒரு புறம் வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

முக்கியமாக இப்பாடலுக்கு பா.ஜ.க கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் எனவும் செய்திகள் பரவியது.

இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...