ஐஸ்வர்யா ராயின் கால்களை புகைப்படம் எடுக்காதே? கலைஞரை திட்டிய அபிஷேக் பச்சன்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தனது மனைவியின் கால்களை புகைப்படம் எடுத்திருந்தால் அதனை நீக்கிவிடுங்கள் என புகைப்படக்கலைஞர் ஒருவரை நடிகர் அபிஷேக் பச்சன் எச்சரித்துள்ளார்.

நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவரது வீட்டின் இரவு விருந்துக்கு சென்றுள்ளார்.

மிகவும் ஷார்ட்டாக ஆடை அணிந்துவந்த ஐஸ்வர்யா ராய் காரில் ஏறி அமர்ந்துகொள்கையில், அவரது கால்பகுதியினை புகைப்படக்கலைஞர்கள் சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்தனர்.

இதனைப்பார்த்து கோபமடைந்த அபிஷேக் பச்சன், புகைப்படக்கலைஞர் ஒருவரை அழைத்து உனது கமெராவில் ஐஸ்வர்யா ராயின் கால்களை புகைப்படம் எடுத்திருந்தால் அதனை நீக்கிவிடு, அனுமதியின்றி இதுபோன்ற புகைப்படங்களை எடுக்காதீர்கள் என எச்சரித்துள்ளார்.

திரைப்பட விழாக்களில் நடிகைகள் மாடர்ன் உடைகளில் வரும்போது சில சமயம் எதிர்பாராத விதமாக ஆடை நழுவும் சம்பவங்களை புகைப்படக்கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்