காயத்ரி, ஆர்த்தியைவிட ஜூலி நல்ல பொண்ணு: இயக்குநர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி தொகுப்பாளரை தொடர்ந்து தற்போது விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த பாபா பகுர்தீன் என்பவர் விளம்பரம் மற்றும் குறும்ப இயக்குனர்.

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இவர்தான் விளம்பர படங்களை இயக்கி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ராமநாதபுரத்துல இருக்கிற இலாஹி ஷாப்பிங் மாலுக்காக இவர் ஜூலியை வைத்து விளம்பர படம் ஒன்றை எடுத்துள்ளார்.

அதுகுறித்து இவர் கூறியதாவது, ஜூலியை நான் தெரிவு செய்தவுடன் மால் உரிமையாளருக்கு அதில் உடன்பாடில்லை, ஆனால் நான் உறுதியாக இருந்த காரணத்தால் அவர் ஒத்துக்கொண்டார்.

சினிமா ஆள்களைவிட திறமையான பொண்ணு, எதைச் சொன்னாலும் ஒரே டேக்ல பண்ணி அசத்திடுது.

பழகுறதுக்கும் உண்மையான பொண்ணு. காயத்ரி, ஆர்த்தியைவிட ஜூலி நல்ல பொண்ணு. `

காசு, பணம்கூட அந்தப் பொண்ணு எதிர்பார்க்க மாட்டேங்குது, நிறைய சாதிக்கணும்ணா'னு சொல்லுச்சு என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்