நடிகை சபர்ணாவின் தற்கொலைக்கு காரணம் இதுதான்: கண்கலங்கிய உஷா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தான் சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை செய்துகொண்டார் என நடிகை உஷா எலிசபெத் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சபர்ணா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இதுகுறித்து ப்ரியாமானவள் தொடரில் நடித்த உஷா கூறியதாவது, சபர்ணாவும் நானும் நல்ல நண்பர்கள்.

சின்னத்திரை நாடகங்களில் நடிக்கறவங்களுக்கு அதைத் தவிர வேற எந்த வேலையும் பார்க்க ஆர்வம் இருக்காது.

ஒரு வருடமாக சபர்ணாவுக்கு சின்னத்திரை வாய்ப்பு எதுவும் அமையலனு என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தா, எல்லாம் சரியாகிடும், கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னேன்.

ஆனா, இப்படி ஒரு முடிவு எடுப்பானு கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கலை. தனிப்பட்ட முறையில் அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததா என்பதைவிட, வாய்ப்பு இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என கண்கலங்கியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers