வாக்காளர் பட்டியலிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயர் நீக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.

இவரின் தந்தை இராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்ததால், பிரியங்காவின் குடும்பம் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தது.

இதைத் தொடர்ந்து பிரியங்காவின் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வந்தது, இதில் 5-வது வார்டு தொகுதியில் பிரியங்காவின் குடும்பத்தினர் பெயர் இருந்தது.

பிரியங்கா திரையுலகிற்கு வந்த பின்னர், அவரின் குடும்பம் மும்பைக்கு சென்றதால், அவர்கள் பரோலியில் நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

எனவே அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என பரேலியை சேர்ந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியங்கா சோப்ரா, மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்