மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சுசீ லீக்ஸ் விவகாரம்: பொலிசிடம் சென்ற பிரபல நடிகை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
411Shares

சுசீ லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவின் நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்பங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதில், நடிகர் தனுஷ், டிடி, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா மற்றும் பல பிரபலங்கள் மோசமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகின.

இந்த புகைப்படங்களை பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சுசீத்ராவே தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

சிறிது காலம் இந்த பிரச்சனை அடங்கியிருந்த நிலையில், தற்போது அந்த சுசீ லீக்ஸ் விஷயத்தில் நடிகை அனுயாவும் மாட்டியிருந்தார். அவருடைய ஒரு புகைப்படமும் வெளியாகி இருந்தது.

தற்போது நடிகை அனுயா தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது, அதனை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்