இன்னும் படுமோசமாக மாறுவேன்: காயத்ரி ரகுராம் டுவீட்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

என்னை மோசமானவர் என நினைப்பவர்களுக்கு இன்னும் படுமோசமாக கூட நான் மாறுவேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் அவரின் செயல் மூலம் மக்களின் வெறுப்பை அதிகளவில் சம்பாதித்தார்.

நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் காயத்ரி ரகுராம் மீதான வெறுப்பு மக்களுக்கு குறைவில்லை.

சமூகவலைதளமான டுவிட்டரில் தொடர்ந்து அவர் பதிவிடும் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னை மோசமானவர் என நினைப்பவர்களுக்கு இன்னும் படு மோசமாக கூட நான் மாறுவேன். எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை தான் திரும்ப கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதே டுவீட்டில், சும்மா விளையாட்டுக்காக சொன்னேன், இதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்