மேனேஜர் இல்லாத நடிகைகளுக்கு தான் இது போன்ற நிலை ஏற்படுகிறது: நடிகை ராய்லட்சுமி

Report Print Santhan in பொழுதுபோக்கு

மேனேஜர் இல்லாத நடிகைகள் தான் சிக்கிக் கொள்கின்றனர் என்று பிரபல நடிகை ராய்லட்சுமி தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்தது.

நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக அவர் மீது பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.

சமீபத்தில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையான நடாசியா, ஒரு விழாவிற்கு சென்று பார்ட்டில் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டதாகவும், அப்போது அவரின் அறைக்கு வந்த ஹார்வி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி, தற்போது உள்ள திரையுலகில் பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள், ஹார்வி வெயின்ஸ்டீன் போல சபல புத்தி கொண்ட தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களை எல்லாம் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும்.

நானும் அது போன்ற தயாரிப்பாளர்களை சந்தித்துள்ளதால் தான் கூறுகிறேன், தற்போது சமூகவலைத்தளம் வந்துவிட்டதால், வெயின்ஸ்டீன் போல தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள்.

நல்ல மேனேஜர் இல்லாத வளர்ந்து வரும் நடிகைகள் தான் இது போன்ற சபல புத்தி கொண்ட தயாரிப்பாளர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...