பாடலை காப்பியடித்த விவகாரம்: பிரபல பாடகருக்கு 415,000 டொலர் இழப்பீடு

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
45Shares
45Shares
ibctamil.com

பிரபல ராப் பாடகர் Eminem-இன் புகழ்பெற்ற பாடலான Lose Yourself பாடலை தழுவி பிரச்சார பாடல் வெளியிட்ட நியூசிலாந்தின் அரசியல் கட்சிக்கு 415,000 டொலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நியூசிலாந்து பொதுத்தேர்தலின் போது அந்நாட்டின் தேசியக் கட்சி (National Party) வாக்கு சேகரிக்கும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

30 வினாடிகள் ஓடக்கூடிய அந்த விளம்பரத்தின் பின்னணி இசை, Eminem-இன் Lose Yourself பாடலை காப்பியடித்து போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்து உயர்நீதிமன்றத்தில் Eminem தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், Lose Yourself பாடலை தழுவியே தேசியக் கட்சியின் பிரச்சாரப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, Eminem-க்கு இழப்பீடாக 415,000 டொலர்களை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

2002-ம் ஆண்டு வெளியான Eminem-இன் ‘8 Mile’ படத்தில் இடம்பெற்றுள்ள 'Lose Yourself' பாடல் ஆஸ்கர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை குவித்திருந்தது.

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஒரே ராப் பாடல் Lose Yourself என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்