நடிகையுடன் தொடர்பு, பல்வேறு காதல்: மனம் திறந்த பிரபல நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1116Shares
1116Shares
ibctamil.com

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி முதல் முறையாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாஸுத்தீன் சித்திக்கி (43). அவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் ஷோரா மற்றும் யானி என்ற இரு பிள்ளைகளும் உள்ளார்கள் என்பதே அனைவருக்கும் தெரியும்.

தனது அந்தரங்க வாழ்க்கை குறித்து ஆர்டினரி லைப் என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் நவாஸுத்தீன் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நடிகை நிஹாரிகா சிங் என்னை தன் வீட்டிற்கு அழைக்க நானும் சென்றேன்.

அங்கிருந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா அழகாக இருக்க இருவரும் உறவு வைத்து கொண்டோம்.

அதன் பிறகு அவருடன் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன். பின்னர் அமெரிக்காவின் நியூயோர்கில் உள்ள உணவகத்துக்கு சென்ற போது அங்கு பணியாற்றிய பெண்ணுடன் ஒரு இரவு கழித்தேன்.

நியூஜெர்சி நகரை சேர்ந்த யூத பெண்ணான சூசனை நான் காதலித்த நிலையில் அவர் மும்பை வந்து என்னுடன் வசித்தார்.

அவரை திருமணம் செய்ய முடியாமல் போன நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

என் முதல் காதலி சுனிதாவுடனான காதல் முறிந்ததை தாங்கி கொள்ள முடியாமல் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்ய நினைத்து பின்னர் மனதை மாற்றி கொண்டதாக புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்