அது நான் இல்லைங்க: மன்னிப்பு கேட்ட ரம்யா

Report Print Tony Tony in பொழுதுபோக்கு

டுவிட்டரில் எப்போதும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இன்று அதிகாலை ஒட்டு மொத்த விஜய், அஜித் ரசிகர்களையே பெரிய சண்டைக்கு கொண்டு வந்தது ஒரு டுவிட் தான்.

ஆம், தொகுப்பாளர் ரம்யா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘மெர்சல் வசூலை அஜித்தால் ஒரு போதும் வெல்ல முடியாது, விஜய் மட்டும் தான் தன் ரசிகர்களை நல்ல திசைக்கு கொண்டு செல்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் அவர்கள் பாக்ஸ் ஆபிஸிற்கு மட்டுமே ரசிகர்களை பயன்படுத்துகிறார்கள்’ என்று டுவிட் செய்தார்.

சில மணி நேரத்திலேயே அந்த டுவிட் எல்லாம் டெலிட் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து தன்னுடைய டுவிட்டர் ஹாக் செய்யப்பட்டதாக அவரே அறிவித்துவிட்டார். மேலும், இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers