திருமணத்தை தள்ளிப்போட்ட நடிகை பாவனா

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

கேரள நடிகையான பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது, இதை தைரியமாக எதிர்கொண்ட பாவனாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் இவருக்கும், நவீன் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வருகிற 26ம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இப்போது திருமண திகதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இத்தகவலை பாவனாவே உறுதி செய்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers