மெர்சல் கொண்டாட்டம்: விஜய் ரசிகர் பரிதாப மரணம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், திரையுலக ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது மெர்சல் படம்.

இக்கொண்டாட்டத்திற்கு நடுவே சோகமான சம்பவம் நடந்துள்ளது, மெர்சல் பட பேனர் கட்அவுட்டை வைக்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் சிலர் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெர்சல் படத்தின் பேனரை 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுவரின் மீது ஏறி நின்று கட்டியுள்ளனர்.

அப்போது சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers