மாணவி அனிதா மரணத்தில் நடிகர் விஜய்யின் உருக்கமான வார்த்தைகள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நீட் தேர்வால் தனது மருத்துவர் கனவு நிறைவேறாத காரணத்தால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனிதாவின் இறப்பிற்கு தமிழக கட்சிகள், நடிகர் நடிகைகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அனிதாவின் வீட்டிற்கு சில அரசியல் கட்சி தலைவர்களும் சென்று ஆறுதல் கூறினார்கள். இதில் நடிகர் விஜய், அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது அண்ணன்களோடு சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.

அனிதாவின் அண்ணனிடம் அவர் என்ன கூறினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. "ஒரு தங்கையை இழக்கும்போது வரும் வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். என்னுடைய நம்பர் தருகிறேன் எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள். உன் தம்பியின் படிப்பு செலவையும் நானே ஏற்று கொள்கிறேன்" என விஜய் அனிதாவின் அண்ணன் மணிரத்னத்திடம் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers