கோல்டன் டிக்கெட் கொடுத்த கமல்: பிக்பாஸில் இறுதிச் சுற்றுக்கு நுழைந்தது யார்?

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த வாரம் நடத்தப்படும் போட்டிகளில் யார் அதிகப் புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்களுக்கு கோல்டன் டிக்கட் வழங்கப்படும் என்றும், அவர் இறுதிப் போட்டியில் நேரடியாக நுழைந்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில், அந்த கோல்டன் டிக்கெட் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் அந்த கோல்டன் டிக்கெட்டை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, கவிஞர் சினேகனுக்கு கொடுத்தார்.

இதன் மூலம் அவர் 100 நாட்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை யாரும் இனி நாமின்டே செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்