ஒரே சமயத்தில் 3 பெண்களைக் காதலித்தேன்: பிரபல நடிகர் ஓபன் டாக்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
45Shares

மூன்று பெண்களை ஒரே நேரத்தில் காதலித்ததாக இந்தி திரைப்பட உலகின் பிரபல நட்சத்திரம் சஞ்சய் தத் மனம் திறந்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத், போதை மருந்து விவகாரம், ஆயுதம் வைத்திருந்தல், பெண்கள் பிரச்சனை என அடுக்கடுக்கான பிரச்சனைகளில் சிக்கியவர்.

ஆயுதம் வைத்திருந்த விவகாரம் தொடர்பில் சிறை சென்று வந்தவர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் நான் ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலித்தேன். ஆனால் அந்த விஷயம் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துவிடாமல் சாமர்த்தியமாக பார்த்துக் கொண்டேன்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானேன். அதில் இருந்து விடுபட எனக்கு நீண்ட பத்தாண்டுகள் தேவைப்பட்டன.

என் மகன் என்னைப்போல ஆகிவிடக் கூடாது என்று பயமாக உள்ளது. என்னால் என் தந்தை பட்ட கஷ்டங்களை நான் பட விரும்பவில்லை என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்