காணாமல் போன நடிகை டிஸ்கோ சாந்தியின் அண்ணன் மகள் கண்டுபிடிப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண் மொழி வர்மனின் 17 வயது மகள் 5 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அருண் மொழி வர்மன் திரைப்பட உதவி இயக்குனராக இருந்து வருகிறார். அவரது மூத்த மகள் அப்ரீனா(17) பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி முதல் அவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர் மாயமாகி 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளித்திருந்தனர்.

மாயமான இளம்பெண் படித்துவரும் பள்ளியில் பொலிசார் நடத்திய விசாரணையில் இதுதொடர்பாக எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்புடைய பகுதியில் உள்ள கமெராக்கள் வேலை செய்யாததால் போதிய ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன அப்ரீனா பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த தேடுதலில் குடும்பத்தினருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers