பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா

Report Print Basu in பொழுதுபோக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தனது குணாதிசயம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இதனால், அவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது.

ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர். இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறினார். மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், அவர் மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்சியின் இறுதி நாளில் நடிகை ஓவியா பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 30ம் திகதி நிகழ்ச்சியின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers