இனி என் வாழ்க்கையில் வராதே: பிக்பாஸில் ஆரவ் காதலை முறித்து கொண்ட ஓவியா

Report Print Santhan in பொழுதுபோக்கு
589Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் இல்லை என்றால் நிகழ்ச்சியையே பார்க்கமாட்டோம் என்று கூறும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் மற்றொரு பங்கேற்பாளரான ஆரவ்வை, நடிகை ஓவியா காதலிப்பதாக அவரிடம் கூறினார்.

ஆனால் அவரோ இதை எந்த ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக ஆரவ் மீது கொண்ட காதலால் மிகவும் இறங்கிப்போய் அவரை அதிகம் தொந்தரவு செய்தார். அதன் பின் இன்றைய எபிசோட்டில் சினேகன் ஓவியாவிடம் சில விடயங்களை கூறி புரியவைத்தார்.

அப்போது ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்பதை உறுதி செய்த ஓவியா பின்பு இனி என் வாழ்க்கையில் வராதே யாருக்கும் இரண்டாம் வாய்ப்பு தரமாட்டேன் என கோபமாக கூறிவிட்டு சென்று விட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்