ஆரவ்விடம் ஓவியாவின் சீண்டல்கள்: கொதித்தெழுந்த கவிஞர்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
1955Shares

பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டபின் ஓவியாவின் ரேஞ்சே மாறிவிட்டது, ஓவியா ஆர்மி, ஷேவ் ஓவியா என்றெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே ஓவியா, ஆரவ்வின் பின்னால் சுற்றிவருவது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து கவிஞர் தாமரை பெயரில் சுரேஷ் கண்ணனின் பிக்பாஸ் பதிவில் கமெண்ட் பதிவாகியிருந்தது.

அதில், ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண். அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

ஓவியாவின் செயல்கள் மகாமட்டம். ஆனால், இதுபற்றி சமூகத்தில் நிலவும் அமைதியை கண்டு நான் வியக்கிறேன். இது டாஸ்க் எல்லாம் இல்லை.

அந்தப் பெண்ணுடைய அப்பட்டமான அத்துமீறல். பரணியிருந்தால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று முன்னர் பெண்கள் எல்லோரும் எதிர்த்தெழுந்தது போல், ஓவியா இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஆண்கள் எதிர்த்தெழாதது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்