பிக்பாஸ்: பிந்து மாதவிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
794Shares

பிக்பாஸில் புதிய போட்டியாளராக வந்த பிந்து மாதவிக்கு வாரத்துக்கு மூன்று லட்சம் வரை சம்பள கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தினந்தோறும் புதிய சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற கேள்வி அனைவரிடத்திலும் பரவி வருகிறது.

ஏற்கனவே உள்ள போட்டியாளர்களுக்கு உள்ள சம்பளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

மேலும் ஏற்கனவே உள்ள போட்டியாளர்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை. எனவே அவர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது புதியதாக வந்துள்ள பிந்து மாதவிக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்களில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது கூட ஒரு படத்தை முடித்து விட்டுதான் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சென்றவுடனும் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இதனால் அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு பிந்து மாதவிக்கு வாரம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

இன்னும் 8 வாரங்கள் பாக்கி உள்ளது. வாரம் ஒன்றுக்கு ரூ 3 லட்சம் என மொத்தம் 24 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்