பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்த்தி இருப்பதால் 100 நாட்கள் சுதந்திரமாக இருப்பேன்: கணவர் கணேஷ்

Report Print Santhan in பொழுதுபோக்கு

ஆர்த்தி பிக்பாசில் கலந்து கொண்டதால், நூறு நாட்கள் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று அவரது கணவர் கணேஷ் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இதில் 15-பிரபலங்கள் பங்குபெற்று, 100-நாட்கள் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அதன் பின்னர் அனைவரிடம் சகஜமாக பழகாத பிரபலங்கள் அங்கு இருக்கும் பிரபலங்களிடம் நடக்கும் ஓட்டெடுப்பு முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் 100-நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தி நடந்து கொள்ளும் முறை சரியில்லை. அதே நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருவது தான் விளையாட்டு, அதை வைத்து பார்க்கையில் ஆர்த்தி செய்வது சரி தான் என தோன்றுகிறது.

முதலில் இந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நானும் ஆர்த்தியின் தந்தையும் தான் அவரை வற்புறுத்தி இந்நிகழ்ச்சி அனுப்பி வைத்ததாக கூறினார்.

ஏனென்றால் அப்போது தான் நான் 100-நாட்கள் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருக்க முடியும் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments