என்னை காயப்படுத்திய அந்த ஒரு வார்த்தை: பாவனா ஓபன் டாக்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிரபல மலையாள நடிகை பாவனா தனது மனதில் தீராத வடுவை ஏற்படுத்திய அந்த ஒரு வதந்தி குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த மாதம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை துயரத்தில் இருந்து மீண்டுள்ள பாவனா, வழக்கம்போல் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் சினிமா துறையில் தான் காலடி எடுத்து வைத்த பின்னர், தன்னை பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தாலும், தனது மனதை விட்டு நீங்காத அந்த ஒரு வதந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, 15 வயதில் சினிமா துறையில் நான் அடியெடுத்து வைத்தேன். நான் நடிக்க ஆரம்பித்த அந்த ஒரு வருடத்திலேயே பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்தாலும், நான் அபார்ஷன் செய்துகொண்டேன் என்ற வதந்தி பரவியது.

அந்த வார்த்தை என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. நான் 16 வயது பெண் என்றுகூட நினைக்காமல், இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள்.

அவர்கள் குடும்பத்திலும் என் வயதுடைய பெண் பிள்ளைகள் இருந்திருப்பார்கள் இல்லையா? அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமாட்டர்களா என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments