அமெரிக்காவில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நேர்ந்த கதி

Report Print Basu in பொழுதுபோக்கு

அமெரிக்காவில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இளையராஜா தன் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட கூடாது என நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், பாடகர் பாலசுப்பிரமணியம் பல நாடுகள் பயணித்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு தற்போது பயணித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments