பாலியல் தாக்குதல்: யார் காரணம்? நடந்தது என்ன? நடிகை பாவனா பரபரப்பு

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிரபல மலையாள நடிகை பாவனா முதன் முறையாக தனக்கு நேர்ந்த துயரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகை பாவனா தன்னுடைய முன்னாள் கார் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

அதன் பின் தைரியமாக நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து கார் ஓட்டுனர் மார்டின் மற்றும் பல்சர் சுனி உள்ளிட்ட 5 பேரை பொலிசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மலையாள இதழுக்கு பேட்டியளித்த நடிகை பாவனா, பாலியல் துன்புறுத்தல் பணத்திற்காக நடக்கவில்லை என்றும், இதன் பின்னால் பெரும் சதி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஒரு நடிகைக்கு கார் ஓட்டும் ஒரு ஓட்டுனருக்கு லொகேஷனில் இருந்து நடிகையை கடத்தும் தைரியம் நிச்சயம் இருக்காது. இதன் பின்னால் திரையுலகை சேர்ந்தவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்.

இவர்கள் பணத்திற்காக தான் செய்தார்கள் என்றால், நிறைய விடயங்கள் ஒத்துப்போகாமல் இருக்கிறது.

நிறைய கேள்விகள் என்னிடம் உள்ளன, நான் வெற்றி பெறும் வரை போராடுவேன்.

அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்று சொல்வார்கள்.

ஆனால் எனக்கு சினிமாவில் நிரந்தர நண்பர்களும், நிரந்தர எதிரிகளும் இருக்கிறார்கள்.

செய்யாத தப்புக்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, எனக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கலாம்.

அதனால் இது போன்ற விடயங்களை பெண்கள் மூடி மறைக்காமல் வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் பாவனா கேட்டுக்கொண்டுள்ளார்.

நான் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றால் ஒரு 10 பேருக்கு தான் தெரிந்திருக்கும், ஆனால் முகத்தை மறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

புகார் கொடுக்காமல் இருந்திருந்தால் இரவில் தூங்காமல் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பேன், அதனால் தான் புகார் கொடுத்தேன்.

இந்த வழக்கை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்ற தெளிவுடனும் இருக்கிறேன் என்று தீர்க்கமாக கூறியுள்ளார் பாவனா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments