என்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்.

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை லேகா வாஷிங்டன்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஒரு நடிகையாக இருப்பது என்பது எளிதல்ல.

பல பிரச்சனைகளை பார்க்க வேண்டிவரும், என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர் என்னை அவர் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி காரில் என்னை அழைத்து சென்றார்.

உன்னை நடிக்க வைத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என என்னிடம் தவறான எண்ணத்துடன் அவர் கேட்டார்.

அதை புரிந்து கொண்ட நான், உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என மட்டும் நினைக்காதீர்கள் என பிடிவாதமாக கூறிவிட்டேன் என கூறியுள்ளார். அந்த இயக்குனர் தற்போது மரணமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments