ஏழைப்பெண்ணை ஏமாற்றினாரா நீயா நானா கோபிநாத்?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இளம்பெண் படிப்பிற்கு உதவி செய்வதாக சொன்ன கோபிநாத் ஏன் அதை செய்யவில்லை என்பதற்கு விளக்கமளித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா ரியாலிட்டி நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் கலந்து கொண்ட ஒரு மாணவியின் படிப்பு செலவை ஏற்பதாக அவர் கூறி பின்னர் அதை செய்யவில்லை என்ற செய்தி வெளியானது.

இது குறித்து கோபிநாத் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில், நிஷா என்ற மாணவிக்கு நான் உதவி செய்வதாக கூறியது உண்மை தான்.

அவரிடன் என் மெயில் ஐடியை கொடுத்து கல்லூரி கட்டணத்துக்கான ரசீதை மெயில் பண்ண சொன்னேன்.

ஆனால் பின்னர் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நிஷா என் உதவியாளரிடம் பேசியதாக கூறியுள்ளார்.

ஆனால் எனக்கு உதவியாளர்கள் என யாருமில்லை என அவர் கூறியுள்ளார்.

கல்விக்காக என்னால் ஆன உதவிகளை நான் செய்து வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரின் விரிவான விளக்கம் இதோ

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments