அஜித் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்த விஜய்! என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 12ஆம் திகதி உலகெங்கிலும் திரைக்கு வருகிறது.

பைரவா திரைப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர்.

மேலும் அஜித்த நடித்த வீரம் படத்துக்கு பரதன் தான் வசனம் எழுதியிருந்தார். அந்த படத்தின் வசனங்கள் அப்போதே பலத்தரப்பால் பாரட்டப்பட்டது.

இந்நிலையில் பைரவா படம் தொடர்பாக பேட்டியளித்த பரதன், தான் முதலில் பைரவா கதையை விஜய்யிடம் சொல்ல போன போது, வீரம் படத்தில் அஜித்துக்கு நீங்கள் எழுதிய வசனங்கள் அனைத்தும் மிக பிரமாதமாக இருந்தது என விஜய் தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

மேலும், வீரம் படத்தை ரிலீஸ் சமயத்தில் தியேட்டரில் ரசிகர்களுடன் விஜய் அமர்ந்து ரசித்து பார்த்ததாகவும் பரதன் தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தை விஜய் தியேட்டரில் பார்த்தார் என்ற செய்தி இரு நடிகர்கள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments