ஆஸ்கர் பந்தயத்தில் டோனி: மகுடம் சூடுமா?

Report Print Basu in பொழுதுபோக்கு
41Shares

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஆஸ்கர் பந்தயத்தில் இடம்பிடித்துள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு தகுதிபெற்றுள்ள 336 படங்கள் பட்டியலில் இரண்டு இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளியான டோனி மற்றும் ரந்தீப் ஹூடா நடிப்பில் வெளியான Sarbjit திரைப்படங்கள் ஆஸ்கருக்கு தகுதிப்பெற்றுள்ளது.

டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் முதல் வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. உலகளவில் ரூ. 215 கோடி வசூல் செய்து அசத்தியது.

தற்போது இது ஆஸ்கர் பந்தயத்தலும் இடம்பிடித்துள்ள நிலையில் டோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments