ஐரோப்பாவில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழ் மாணவர்களுக்கு நடந்த போட்டிகள்!

Report Print Abisha in கல்வி
557Shares

கடந்த மூன்று வருடங்களை போன்று இந்த வருடமும் நடைபெற்ற ஆங்கில அறிவு போட்டியானது பாரிஸ் மாநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆங்கில பேராசிரியர்களான Ms.Catherine Kospitto மற்றும் Ms.Katrina Huly முன்னிலையில், Thumbs Up English Elocution Centre ஆங்கில பாடசாலை மாணவர்களும் ஆசியர்களும் இணைந்து மிக விமரிசையாக 06/10/2019 அன்று காலை 09:00 மணி அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு 150 மாணவ, மாணவிகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் 136 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . இந்த மாணவ மாணவிகள் கொண்ட குழுவானது வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே, Elementary (18 மாதம் - 6 வயது), Start Of Beginners (7 - 9 வயது), Beginners (10 - 12 வயது), Intermediate (13 - 15 வயது), Upper Intermediate (16 - 21 வயது) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது:

மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Rhymes, Recitation, Spell Bee, Punctuation writing, Comprehension Writing, Dictation, Speech, on the spot speech, Show and tell, skit போன்றவை நடைபெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.

மேலும் தமிழ் பேசும் மாணவ மாணவியர்களுக்காக எடுக்கப்படும் இம் முயற்சியானது மென்மேலும் வளரவும் , ஆங்கிலக் கல்வியில் மாணவ செல்வங்கள் இவ்வாறு ஆழமாக காலூன்றியிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

எங்களுடைய இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த விளம்பரதாரர்களான LANKASRI E-MARKET , Salle 5p Star ,Japan Karate Do ITOSU - KAI Switzerland , NSP SARL, Barathy Press , ABI Auto Ecole,Le Pannier Grenelle, Airport line, Anojan Allemintation , Samithiriya Bridal Service , United Voyages, Chetti Naadu restaurant , Eesan Jewellery , Naru saloon , Kamalam eilk,மற்றும் அனைத்து நண்பர்கள் , நலன்விரும்பிகள் எல்லோருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்