அழிவின் விளிம்பில் மெல்லிய ஓடு கொண்ட அரியவகை ஆமையினங்கள் : கடைசி பெண் ஆமையும் உயிரிழந்தது

Report Print Kavitha in கல்வி

சீனாவில் மெல்லிய ஓடு கொண்ட அரியவகை ஆமையினத்தின் கடைசி பெண் ஆமையும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாங்ட்ஷி (Yangtze) ஆமைகள் என வர்ணிக்கப்படும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகள் சீனாவில் மட்டுமே இருந்து வந்தன.

இந்த வகை ஆமைகள் வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் பேரழிவைச் சந்தித்து வந்தன.

இந்நிலையில் இந்த ஆமையின் கடைசி 4 ஆமைகள் ஷூஷோ (Suzhou zoo) விலங்கியல் பூங்காவில் 3 ஆண் ஆமைகளும், ஒரு பெண் ஆமையும் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இதில் 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது.

இதன் காரணமாக இனப்பெருக்கம் அடைய முடியாமல் யாங்ட்ஷி ஆமை இனம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்