யாரும் அறிந்திடாத ஒக்டோபஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Report Print Kavitha in கல்வி

கடல் வாழ் உயிரினங்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிப்பதில் ஒக்டோபஸ் தான் அதிகம் காலம் எடுத்துக் கொள்கிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒக்டோபஸை எண்காலி அல்லது சாக்குக்கணவாய் என்றும் அழைக்கப்படுகின்றன.

இது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும்.

இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளதால் எண்காலிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. ஒக்டோபஸிற்கு மூன்று இதயங்கள் உண்டு.

ஒக்டோபஸ் உயிரினத்திலும் ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் உண்டு. இந்த இரண்டுமே தன் இனப்பெருக்கத்திற்கான உணவுகளை கொண்டிருக்கும்.

ஆண் ஒக்டோபஸ்கள் அதன் கால் ஒன்றின் பகுதியில் ஒருவகை விந்து அணுக்களை பெற்றுள்ளன. இதை Spermatophores என்று அழைக்கின்றனர்.

இந்த விந்து அணுக்கள் பெண் ஒக்டோபஸ்களின் Mantel Cavity என்ற பகுதிக்குள் செலுத்தப்படுகின்றது.

பெண் ஒக்டோபஸ்கள் சூல் கொண்ட பின்னர் 1/8 இஞ்ச் அளவிலான முட்டைகளை இடுகிறது.

இந்த பெண் ஒக்டோபஸ்கள் சுமார் 100,000 முட்டைகளை இடும் திறன் கொண்டவைகளாக காணப்படுகின்றன.

3 இதயங்களும் 8 கைகளும் கொண்டு பிறக்கும் இந்த ஒக்டோபஸ்கள் பிறந்த 5 மாதத்தில் தங்கள் இனபெருக்க உணவுகளை அடைந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்