ஹொன்சி கல்லூரியில் 9 சித்தியினை பெற்று சாதனை படைத்த மாணவி!

Report Print Gokulan Gokulan in கல்வி

2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தரப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

அந்த வகையில் ஹட்டன் வலயத்திற்குட்பட்ட ஹொன்சி கல்லூரியில் கல்வி கற்ற வசந்தகுமார் இசாலினி என்ற மாணவி 9 பாடங்களிலும் ஏ தர சித்தியினை பெற்று கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் என கல்லூரியின் அதிபர் வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹொன்சி கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 80 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

விவசாயம், தமிழ், இலக்கியம், சங்கீதம், நடனம், முயற்சியான்மை, கல்வி, சிங்களம், இஸ்லாம், கிருஸ்தவம், கத்தோலிக்கதிருமறை ஆகிய பாடங்களில் 100 வீதம் பெருபேறு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்