வெப்பத்தை கணிக்கும் தெர்மா மீட்டர் பறவை: உங்களுக்கு தெரியுமா?

Report Print Kavitha in கல்வி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வான்கோழி இனத்தைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’ என்னும் பறவை வெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும்.

இதனை ‘தெர்மாமீட்டர்’ பறவை என்று அழைக்கப்படுகின்றது.

குறித்த பறவை, இனப்பெருக்க காலத்தில் தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும்.

இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, அதைச் சுற்றிலும் முட்டையிடுமாம்.

ஆண் பறவை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும்.

மேலும் இந்த பறவை வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும்.

இந்த பறவை மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும்

தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்