ஒரு கிலோ தேனை சேகரிக்க ஐம்பது லட்சம் தடவை பறந்து செல்லும் பூச்சி எது தெரியுமா?

Report Print Kavitha in கல்வி

தேனிக்கள் ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும்.

இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.

தேனீக்கள் பூக்களிலிருந்து தேனை உறிஞ்சுவதற்கு ஒரு நீண்ட குழல் வடிவ நாக்கைக் கொண்டுள்ளன. பூ வாசனை அறிவதற்கு திறன் மேம்பட்ட உணர் கொம்பு களையும் வைத்துள்ளன.

தேனீக்கள் ஒரு கிலோ தேனை சேகரிக்க, குறைந்தபட்சம் ஐம்பது லட்சம் தடவை கூட்டை விட்டுப் பறந்து சென்று தேன் கொண்டு வரும் வல்லமை படைத்தது.

மேலும் பிற பூச்சி களைப் போல காற்றில் தம் இனத்திற்குரிய பிரமோன் வாடையைத் தவழ விட்டு சக அங்கத்தினர்களுடன் தொடர்பு கொள்வ தோடு, வேறொரு சிறப்பு யுக்தியையும் வைத்திருக்கின்றன.

தேனீக்களின் சிற்ப சாதுரியத்துக்கு சாட்சி, அபூர்வ வடிவமைப்பைக் கொண்ட அழகிய ஆர்க்கிடெக்ட் கூடுகள்தான்.

பொதுவாக 2000 அடிக்கு அப்பால் இருக்கும் பூக்களின் வாசனையைக் கூட தேனீக்களால் நுகர்ந்து விட முடியும். இப்படி அறிந்தவுடன் தன் சகாக்களுக்கு ஒரு பிரத்தியேகமான சங்கேதப் பாதையைக் காற்றில் ஓவியம் போல போட்டுக் காட்டும்.

இந்தப் பாதை பல தரப்பட்ட டான்ஸ் மூவ்மென்ட்களால் நிறைந்தது. மலர் இருக்கும் தூரம், அதி லிருக்கும் தேனின் தரம் மற்றும் இருக்கும் தேனின் அளவு போன்ற தகவல்களை வெளிப்படுத்துவதாகவே இந்த டான்ஸ் அமைந்திருக்கும்.

இதன் ரகசிய நுட்பங்களைப் புரிந்து கொள்ள மனிதர்கள் பாவம்... இன்னும் சிரமப்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். இதற்கு ஒரு பெயர் உண்டு.

இந்தப் பாதை, மலரின் இருப்பிடத்திற்கு குறைந்தபட்ச குறுக்கு வழியாகவே இருக்கும். இப்படி நேர்க்கோட்டில் மலரை நோக்கி மணிக்கு 15 கி.மீ வேகத்தில் இவை பறக்கின்றன என்று சொல்லப் படுவதில் அவ்வளவு உண்மையில்லை.

இவற்றின் உடலமைப்பு, அருகாமையில் உள்ள மலர்களில் தேனெடுத்து கூடு திரும்புவதற்கு போதுமான தகவுகளோடுதான் படைக்கப்பட்டுள்ளது.

வேகப் பறத்தலுக்கு ஏதுவாக இவற்றால் தம் இறக்கைகளை நொடிக்கு 230 தடவை அடிக்க முடிகிறது.

எனினும் வேகப் பறத்தலில் எரிசக்தியை வீணடித்து விட்டால் தேன் கொணர்தலில் சோர்ந்து விடும். சமயத்தில் இவற்றால் 10 கி.மீ தூரம் கூட லேண்டிங் ஆகாமல் பறக்க முடியும். எனினும் இவை இதை முயற்சிப்பதில்லை.

இவை ஒரு நிமிடத்தில் முப்பது பூக்களில் தேனருந்தி விடுகின்றன. இவ்வாறு மலரில் உறிஞ்சும் தேனை ஒரு பை போன்ற அமைப்பில் சேகரிக்கின்றன. பை நிரம்பியவுடன் கூட்டிற்குத் திரும்பி வந்து தேனைக் கொட்டி விட்டு மறுபடியும் பறக்கின்றன.

லோகத்தில் எண்ணற்ற தாவர இனங்களும் விதவிதமான பூக்களும் இருக்கின்றன. இந்தப் பூக்கள் இதழ் விரித்துப் பூப்பதில் மட்டுமல்லாது, தேனைச் சுரப்பதிலும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்ட நேர வித்தியாசத்தைக் கொண்டுள்ளன.

இது தங்களது மகரந்தச் சேர்க்கையை மேம்படுத்துவதற்கு பூச்சிகளை ஈர்ப்பதற்காக தாவரங்கள் கையாளும் ஒரு விதமான தந்திர யுக்தி ஆகும்.

இத்தகைய சரியான நேரத்தைக் கண்டறிந்து சரியான காலத்தில் சென்று தேன் எடுப்பது தான் தேனீக்களின் விசித்திரம்.

தேனீக்களின் தேடலில் எதேச்சையாய் ஒரு குறிப்பிட்ட வகை மலரில் நல்ல அளவில் தேன் கிடைத்து விட்டால், அந்த நேரத்தை தேனீ தனது கணினி மூளையில் பதிவு செய்து கொள்கிறது. இது மாதிரி பல்வேறு பூக்களின் நேரங்களை தன் சிறிய மூளையில் பதிவு செய்து வைத்திருக்கும்.

பிறகு தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க தம் சுற்றுப் புறத்து மலர்களின் ஒட்டுமொத்தக் கால அட்டவணை ஒன்றையும் தயார் செய்து, அதையும் மூளையில் பதிவு செய்துகொள்கிறது. பின்னர் தினசரி சூரியன் இருக்கும் நிலை, அதன் வெப்பம் ஆகியவற்றைக் கொண்டு, கால நேரத்தைக் கணக்கிட்டு அட்டவணைப்படி பூக்களுக்குப் போய் வருகிறது.

தேனீக்களின் கணிப்பிற்கும் நிஜக் கடிகாரத்தின் நேரத்திற்கும் எப்போதுமே 18 நிமிடங்களுக்கு மேல் வித்தியாசம் இருப்பதில்லை என்பது ஒரு அபூர்வம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers