ஆங்கிலம் அறிவோம்: “Buffer state என்றால் என்ன?’’

Report Print Kavitha in கல்வி

Buffer என்றால் ஆபத்து விளையாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு பொருளைக் குறிக்கும். கண்ணாடிப் பொருளின் மீது ஒரு ஸ்பாஞ்ச் படலம் இருக்கிறது என்றால் அது Buffer ஆகப் பயன்படுகிறது. Friends can act as a buffer against stress.

Buffer state என்றால் இரண்டு எதிரி நாடுகளுக்கு நடுவே இருக்கிற ஒரு சிறிய நடுநிலை நாடு எனலாம். இதன் காரணமாக அந்த இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே அந்தப் பகுதியில் எல்லைப் பிரச்சினை வராமல் தடுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஒரு buffer state ஆக இருந்தது. அதேபோல ஒரு காலகட்டத்தில் பூட்டான், சிக்கிம் போன்ற நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கும் சீனாவுக்கும் நடுவே buffer states ஆக விளங்கின இதுவே இதன் பொருளாகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers