தண்ணீரில் தூங்கும் வாத்து : தெரிந்து கொள்ளுவோம்

Report Print Kavitha in கல்வி

ஆங்கிலத்தில் ‘ஸ்பாட் பில்ட் டக்’ என்று அழைக்கப்படும் இது, தமிழில் ‘புள்ளி மூக்கு வாத்து’ எனப்படுகிறது.

இதன் மஞ்சள் நிற அலகில், சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இதனால் ‘சிவப்பு மூக்கன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

இவ்வினம் 55-63 செ.மீ. நீளமும், 83-95 செ.மீ. அகல இறக்கையும், 790-1,500 கிராம் எடையும் கொண்டிருக்கின்றன.

வடக்கில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், தெற்கில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.

மித வெப்ப மற்றும் கிழக்கு ஆசியாவில் பரவலாகக்காணப்படும் இவ்வாத்துக்களின் துணை இனங்களுக்கேற்ப காணப்படுகின்றன.

இவை தெற்கு பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் ஜப்பானில் தெற்கு வரையிலும் வாழ்கின்றன.

இது இந்தியா முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவை.

இது வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண், பெண் பறவைகள் ஜோடியாக இணைந்துதான் இரை தேடும்.

காலை, மாலை வேளையில்தான் இவை இரைதேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடி, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.

நீரின் மேற்பரப்பில் உள்ள பாசிகள் மற்றும் பயிர் வகைகளை உண்ணும் இவை, சிறிது தலையை மூழ்கியும் சாப்பிடும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்