ஆங்கிலம் அறிவோம்: Accessories என்று பெண்கள் பேச்சில் இடம்பெறும் வார்த்தைக்கு என்ன பொருள்?

Report Print Kavitha in கல்வி

உடைக்குப் பொருத்தமான கைப்பை, காதணி, சங்கிலி, காலணி போன்றவற்றை accessories என்போம். Accessories என்பதைத் தோராயமாக அணிகலன்கள் எனலாம்.

அதாவது ஒன்றை அதிகப் பயனுள்ளதாகவோ அதிக அழகானதாகவோ ஆக்குவதற்காக இணைக்கப்படும் பிற பொருளை accessories என்பார்கள்.

ஆனால், சட்டத்தின் பார்வை வேறு. Accessory என்றால் ஒரு குற்றம் நடக்கத் துணையாக இருப்பவர். அதாவது, நேரடியாக ஒரு குற்றத்தில் ஈடுபடாமல் அந்தக் குற்றம் நடக்க தூண்டுபவர் அல்லது துணை நிற்பவரைச் சட்டம் accessory என்று அழைக்கிறது.

ஒரு இயந்திரம் அல்லது கருவியைச் சரியாக இயக்குவதற்காக அதில் சேர்க்கப்படும் அதிகப்படி விஷயங்களையும் accessory எனக் குறிப்பிடுவதுண்டு. Accessories for a premium car include electric windows and a sunroof.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers