Transaction என்ற வார்த்தையை Trans, action என்று பிரிக்கலாமா?

Report Print Kavitha in கல்வி
23Shares
23Shares
ibctamil.com

பரிவர்த்தனையைக் குறிக்க Transaction என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இதை Trans, action என்று பிரிப்பது சரியா?

Trans, Action ஆகிய இரண்டு பகுதிகள் கொண்டதுதான் Transaction. Trans என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் Across என்ற பொருள் உண்டு.

Transport என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். Port என்றால் ஒன்றைச் சுமந்து செல்வது என்று பொருள் (Noun ஆகப்பயன்படும்போது அது துறைமுகத்தைக் குறிக்கிறது). Trans என்ற பகுதியின் பொருளோடு இதைச் சேர்த்துப் பார்க்கும்போது Transport என்பதன் விளக்கம் புரிகிறதல்லவா?

Gress என்றால் செல்வது அல்லது தாண்டுவது என்று பொருள். Transgress என்றால் ஏதோ ஒரு எல்லையை​யோ, சட்டத்தையோ மீறுவது என்று அர்த்தம்.

Transaction என்றால் ஏதோ ஒரு Action (செயல்பாடு) Across நடைபெறுகிறது என்று பொருள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்