கண்டங்கள் விட்டு கண்டங்கள் வரும் சிறுபறவை

Report Print Kavitha in கல்வி
58Shares
58Shares
lankasrimarket.com

ஐரோப்பா, ஆசிய கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வரும் பறவை தான் பொறி உள்ளான்.

இந்த கடல்கடந்து வரும் பொறி உள்ளானின் ஆங்கிலப் பெயர் 'உட் சாண்ட்பைப்பர்' (Wood Sandpiper) மற்றும் இதன் உயிரியல் பெயர் 'டிரிங்கா கிளாரியோலா' (Tringa glariola) ஆகும்.

இது ஸ்கோலோபாசிடே (Scolopacidae) என்ற பறவைக் குடும்பம் சேர்ந்தாகும்

இந்த பொறி உள்ளான் வலசைப் பறவை (Migratory Bird) வகையை சார்ந்தது.

இது சதுப்பு நிலங்கள், ஏரி, ஆறு, ஈரமான விவசாய நிலங்கள் காணப்படும்.

இந்தப் பறவைகள் நெடுந்தொலைவு வரை பறந்துவரும் திறனுடையவை.

இது வாலை ஆட்டியவாறு தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு இருப்பதே இதன் அடையாளம்.

உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

இதன் கால்கள் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் இருக்கும்.

பொறி உள்ளான் நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள சிறிய முதுகெலும்பிகள், மண் புழு போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். அதுமட்டுமின்றி அதன் அலகுகள் சேற்றில் இரை தேடுவதற்கு ஏதுவாக இருக்கும்.

பொறி உள்ளான் விசில் சத்தத்தைப்போல விட்டுவிட்டுக் குரலெழுப்பும்.

உயரமாக வளர்ந்த புல்வெளிப் பகுதிகளில் சருகுகளைக்கொண்டு கூடு அமைத்து முட்டைகள் இடும்.

உலர்ந்த மரப்பொந்துகளிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்.

குளிர்காலத்திற்குப் பிறகு இவை தங்கள் சொந்த இடத்திற்குச் திரும்பிச் சென்று விடுகின்றன.

இதன் அளவு 23 செ.மீ ,எடை 50 - 100 கிராம் மற்றும் இதன் இறக்கை அகலம் 40 செ.மீ ஆகும்.

இதன் இனப்பெருக்கப் பருவமானது மே முதல் ஆகஸ்ட் வரையான 23 நாட்கள் இனப்பெருக்க காலப்பகுதியாக இருக்கும்.

இந்த பறவை 1 முதல் 4 வரை முட்டைகளை இடும்.

இந்த சிறு பறவையின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்