உலகப்புகழ் பெற்ற சில நிறுவனங்களின் பெயர்கள் எப்படி வந்தது தெரியுமா?

Report Print Harishan in கல்வி

உலக அளவில் புகழ்பெற்ற சில பிரபல நிறுவனங்களின் பெயர்க்காரணம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபோர்டு(Ford)

ஃபோர்டு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் ரோட்ஸ்டர் காருக்கு என்ன பெயர் வைப்பதென நிறுவன உரிமையாளர் குழப்பத்தில் இருந்த போது, தான் படித்த அமெரிக்க புராணக் கதைகளில் உள்ள ஒரு பறவையின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது.

அதன்படி, படுவேகமாக பறக்கும் திறன் கொண்ட ‘Thunderbird'என்னும் அந்த பறவையின் பெயரையே தான் தயாரித்த ஸ்போர்ட்ஸ் காருக்கு வைத்துள்ளார், ஃபோர்டு நிறுவன உரிமையாளர் ஹென்ரி ஃபோர்டு.

ரீபோக்(REEBOK)

J.W.Forter&sons என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தொடங்கிய ஸ்தாபகரின் பேரன்கள் நிர்வகித்து வந்த போது, டிக்‌ஷனரியில் பார்த்த பெயர் ஒன்று மிகவும் பிடித்துப்போயுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் வாழும் மான் போல் தோற்றம் கொண்ட விலங்கின் பெயரான ‘ரீபோக்’ என்பதே அந்த டிக்‌ஷனரியில் பார்த்த பெயராகும். பெயர் பிடித்து போக, உடனடியாக நிறுவனத்தின் பெயரை ரீபோக் என மாற்றியுள்ளனர். இன்று உலக அளவில் பிரபல ஷூ நிறுவனமாக விளங்கி வருகிறது.

கிரேஹவுண்ட்(Greyhound)

வட அமெரிக்காவில் புகழ்பெற்ற பேருந்து நிறுவனமான கிரேஹவுண்ட் நிறுவனத்தின் பெயர்க்காரணம் மிகவும் வித்யாசமானது.

நீண்ட கால்களுடைய வேட்டை நாய் ஒன்றின் பெயராக இருந்தது, கிரேஹவுண்ட். அப்போது இரு சாலைகளுக்கு இடையே இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதி கடை ஒன்றின் ஜன்னல் வழியாக பார்த்த ஒரு நபருக்கு கிரேஹவுண்ட் போல தோன்றியுள்ளது.

உடனே அப்பகுதியில் ஓடிய இந்த நிறுவனத்தின் பேருந்துகளுக்கு கிரே ஹவுண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் முன்னாள் பெயர் ‘மொசபா டிரான்ஸ்போர்ட்’ ஆகும்.

கேட்டர்பில்லர்(Caterpillar)

என்ஞின் தயாரிப்பு, மெஷின் வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறப்பாக விளங்கி வருவது கேட்டர்பில்லர் நிறுவனம். 1900-களில் இந்த நிறுவனம் தயாரித்திருந்த நீராவி டிராக்டரை இயக்கியபோது, அது கம்பளிப் பூச்சி போல் நகர்ந்துள்ளது. அதை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் ஒருவர் கிண்டாலாக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

உடனே தன் நிறுவனத்தின் பெயரை கேட்டர்பில்லர் என்றே மாற்றிவிட்டாராம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்