உருளை மற்றும் எலுமிச்சையில் மின்சாரம் தயாரிக்க முடியுமா?

Report Print Fathima Fathima in கல்வி

உருளைக்கிழங்கு அல்லது எலுமிச்சை பழத்தில் செம்பு, துத்தநாகத் தகட்டை குத்திவைத்து அந்த இரண்டு தகட்டையும் இணைத்து எல்இடி பல்பை எரியச் செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா?

இவ்வாறு இருவேறு உலோகங்களை புகுத்தும்போது எலுமிச்சை, உருளைக்கிழங்கு போன்ற தாவரப் பொருட்கள் மின்வேதி மின்கலமாக மாறி வேதி ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது.

உருளைக்கிழங்கில் உள்ள வேதிப்பொருட்களுடன் துத்தநாகம் வினைபுரிவதன் தொடர்ச்சியாகத் தன்னிடமிருந்து எலக்ட்ரானை விடுவித்து செம்பிடம் சேர்க்கிறது.

இந்த எலக்ட்ரான் எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கில் உள்ள மின்பகுளி பொருட்களின் ஊடே செல்ல முடியும்.

இதன் தொடர்ச்சியாக மின்னோட்டம் ஏற்படுகிறது, இது ஒருவகை வோல்ட்டா மின்கலம், பொதுவாக அமிலங்கள் செறிவாக உள்ள காய்கனிகளை இவ்வாறு பயன்படுத்த முடியும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்