மன்னர்களுடன் பாடசாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

Report Print Akkash in கல்வி

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நேற்று முன் தினம் நாடளாவிய ரீதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் கொழும்பு - காலி முகத்திடலில் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இணைவில் தேசிய கீதம் பாடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் பலரும் மன்னர்கள் மற்றும் நமது நாட்டின் பிரசித்தி பெற்ற தலைவர்களின் வேடம் அணிந்திருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்