பண­மும் செல்­வாக்­குச் செலுத்­து­கி­ற மாண­வர் அனு­மதி

Report Print Thayalan Thayalan in கல்வி

2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ள­போ­தும், தரம் ஒன்று மாண­வர் அனு­மதி இன்­னும் நிறை­வ­டை­ய­வில்லை. பிர­பல பாட­சா­லை­களை எதிர்­பார்த்து நம்­பி­யி­ருந்து அது கிடைக்­காது மேல்­மு­றை­யீடு செய்து ஒரு மாதம் கடந்த நிலை­யி­லும் மாண­வர் அனு­மதி இன்­னும் தொடர்ந்­து ­கொண்­டி­ருக்­கி­றது என்று கல்வி அதி­கா­ரி­க­ளால் கூறப்­ப­டு­கி­றது.

தரம் ஒன்று மாண­வர் அனு­ம­தி­யில் மாண­வர்­க­ளின் பெற்­றோர் தாம் விரும்­பிய பாட­சா­லை­யில் பிள்ளை களைச் சேர்க்­க­வேண்­டும் என்று முண்­டி­ய­டிப்­பது வழ­மை­யாக இருக்­கி­றது. ஒவ்­வொரு பெற்­றோ­ரும் தமது பிள்­ளை­க­ளைப் பிர­பல பாட­சா­லை­க­ளில் சேர்க்­க­வேண்­டும் என்று கரு­திச் செயற் பட்­டுள்­ள­மை­யும் இந்­தத் தாம­தத்­துக்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

ஒரு மாண­வனை பாட­சா­லை­யில் அனு­ம­திக்­கும் விண்­ணப்­பத்தின் போது 3 பாட­சா­லை­க­ளின் பெயர்­க­ளைத் தமது விண்­ணப்­பப்­ப­டி­வத்­தில் கோர­மு­டி­யும். அவ்­வாறு கோரிய 3 பாட­சா­லை­க­ளில் முத­லா­வது பாட­சா­லைக்கு விண்­ணப்­பிப்­பர். புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் மாண­வர்­கள் சேர்த்­துக் கொள்­ளப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

பணம் செலுத்­தி­யும் பலர் மாண­வர்­க­ளைப் பாட­சா­லை­க­ளில் சேர்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர். இது சட்­ட­ரீ­தி­யா­கச் சிக்­கலை எதிர்­கொள்­ளா­த­வாறு பாட­சாலை நிர்­வா­கங்­க­ளால் நிதி பெறப்­ப­டு­கி­றது என்று பெற்­றோ­ரும் கல்வி அதி­கா­ரி­க­ளும் கூறு­கின்­ற­னர்.

அத­னால் பாட­சா­லை­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கா­த­வர்­கள் மீண்­டும் மீண்­டும் மேல்­மு­றை­யீடு செய்­தும்­கூட அனு­மதி கிடைக்­காத நிலை­யி­லும் சிலர் தமது தெரி­வில் மூன்­றா­வது தெரி­வுப் பாட­சா­லை­யில் சேர்க்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதனை நேற்­றைய தின­மும் காண­மு­டிந்­தது.

அதி­க­ளவு பணம் கோரப்­ப­டு­வ­தால் சில பெற்­றோர் தாம் விண்­ணப்­பித்த பாட­சா­லை­க­ளி­லி­ருந்து விலகி இரண்­டாம் மூன்­றாம் தெரி­வுப் பாட­சா­லை­க­ளில் தமது பிள்­ளை­க­ளைச் சேர்த்­துள்­ள­னர் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்