102 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி

Report Print Kavitha in கல்வி

துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணிநேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சுதேசா என்ற மாணவி.

துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12), இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா, ஏற்கனவே இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடும் சுதேசா ஆங்கில பாடல்களையும் பாடி பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணிநேரம் 15 நிமிடங்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடியதே கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.

சுதேசா இச்சாதனையை முறியடித்துள்ளார், உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிக மொழிகளில் பாடியவர் என்ற சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.

இதுகுறித்து சுதேசா கூறுகையில், 2 மணி நேரத்தில் ஒரு மொழி பாடலை கற்றுக்கொண்டு விடுவேன், சிறிய பாடலாக இருந்தால் 1½ மணி நேரத்தில் கற்றுக்கொண்டு விடுவேன் என தெரிவித்துள்ளார்.

கி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்