அமெரிக்காவில் கல்வி கற்கும் மாணவனின் வியக்க வைக்கும் செயல்

Report Print Suman Suman in கல்வி

அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மாணவனொருவனின் செயல் அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளதுடன், மனிதாபிமானத்திற்கு உதாரணமாகவும் அமைந்துள்ளது.

குறித்த மாணவனான எம்.கே.சுப்பிரமணியம் பாடசாலை நேரத்திற்கு பின்னர், அமெரிக்காவிலுள்ள விவசாய சந்தையில் வயலின் வாசித்து அதன் மூலமாக பணம் சேகரித்து வருகிறார்.

இவ்வாறு அவர் சேகரிக்கும் பணத்தின் மூலம் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஔியில் மின்சாரத்தை பெறுவதற்கான உபகரணங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் இந்தியாவிலுள்ள 2 பாடசாலைகளுக்கும், இலங்கையில் முதல் தடவையாக கிளிநொச்சி கிலாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கும் அவற்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த சூரிய ஒளியின் மூலமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்